களு கங்கையில் குதித்த கணக்காளர் ; தேடுதல் பணிகள் தீவிரம்!
களுத்துறை பாலத்திலிருந்து களு கங்கையில் குதித்து கணக்காளர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் வழங்கிய தகவலையடுத்து பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து விசேட தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
களுத்துறை வடக்கு பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதுடைய கணக்காளர் ஒருவரே கங்கையில் குதித்து காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கங்கையில் குதித்து காணாமல்போன கணக்காளரின் கையடக்கத் தொலைபேசி பாலத்தின் நடுவில் வைத்து பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த கணக்காளர் களுத்துறை பாலத்தை நோக்கி பயணிக்கும் காட்சிகள் வீதியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் களுத்துறை தெற்கு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.













.jpeg)