அரச வைத்தியசாலைகள் மற்றும் வைத்தியர்கள் எதிர்கொண்டுள்ள நெறுக்கடிகளுக்குத் தீர்வு வழங்குவதற்கு சுகாதார அமைச்சருக்கு வழங்கப்பட்ட48 மணித்தியாள காலக்கெடு வெள்ளிக்கிழமை (30) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதி செயளாலர் வைத்தியர் ஹன்சமால் வீரசூரிய தெரிவிக்கையில்,
இலவச சுகாதார சேவையைப் பாதுகாக்கவும், வைத்தியர்களின் வெளியேற்றத்தைத் தடுக்கவும் இக்கோரிக்கைகளை முன்வைத்தோம். கடந்த டிசம்பரில் எட்டப்பட்ட இணக்கப்பாடுகளை ஜனவரி 5 ஆம் திகதிக்குள் அமுல்படுத்துவதாக அரசு உறுதியளித்திருந்தது. எனினும், சுகாதார அமைச்சரின் பிடிவாதமான போக்கினால் அந்த வாக்குறுதிகள் மீறப்பட்டுள்ளன.
வைத்தியர்களின் கொடுப்பனவுகளில் மூன்றில் ஒரு பகுதியை ஏற்கனவே நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளோம். எமது கோரிக்கைகள் குறித்து ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முன்வராத பட்சத்தில், போராட்டத்தைத் தீவிரப்படுத்துவதைத் தவிர எமக்கு வேறு வழியில்லை என்றார்.










.jpeg)


