புதிய 5 அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி !


புதிய அரசியல் கட்சிகள் 5 ஐ பதிவு செய்வதற்கு தேர்தல் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

சோசலிச மக்கள் முன்னணி, மக்கள் பங்கேற்பு ஜனநாயக முன்னணி, மலையக அரசியல் அரங்கம், சமத்துவக் கட்சி, புரட்சிகர மக்கள் சக்தி ஆகிய கட்சிகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டிற்கான புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக நடைபெற்ற நேர்முகப்பரீட்சையைத் தொடர்ந்து, இந்த 5 அரசியல் கட்சிகளையும் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டில் 83 அரசியல் கட்சிகள் பதிவுக்காக விண்ணப்பித்திருந்தன.

அவற்றில் 47 கட்சிகள் ஆரம்ப நேர்முகப்பரீட்சைக்காத தெரிவு செய்யப்பட்டிருந்தன. இறுதி நேர்முகத் தேர்வுகளின் பின்னர், அந்தக் கட்சிகளில் 5 கட்சிகளுக்கு இவ்வாறு பதிவிற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய, தற்போது நாட்டில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் எண்ணிக்கை 85 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.