அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 9 சந்தேகநபர்கள் கைது !


அநுராதபுரம் - ஹுரிகஸ்வெவ பகுதியில் அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக புதையல் தோண்டிய சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை (19) பிற்பகல், கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட ஏழு ஆண் மற்றும் இரண்டு பெண் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்;து புதையல் தோண்டும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் 22 முதல் 70 வயதுக்குட்பட்ட கலென்பிந்துனுவெவ மற்றும் ஹுரிகஸ்வெவ பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (20) கெக்கிராவ நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ஹுரிகஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.