உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது. அதற்கமைய, உலக பிரதான சந்தையில் தங்கத்தின் விலை 4,729 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், வெள்ளி அவுன்ஸ் ஒன்றின் விலை 95.86 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் உலக சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வேகமாக அதிகரிப்பது அவதானிக்கப்பட்டது. தற்போது மீண்டும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில், இலங்கையிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தை வட்டாரங்களின்படி, இன்று காலை 8 மணியுடன் ஒப்பிடுகையில் உள்நாட்டில் தங்கத்தின் விலை 2,000 ரூபாவால் அதிகரித்துள்ளது.
இதன்படி, இன்று பிற்பகல் கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தையில் "22 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை 342,200 ரூபாவாகக் காணப்பட்டது.
இதேவேளை, நேற்று 368,000 ரூபாவாகக் காணப்பட்ட "24 கரட்" தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 370,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டித்தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












.jpeg)
