உயர்தர வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு !


வவுனியா, மயிலங்குளம் குளத்தில் நீராட சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மாமடுப் பொலிஸார் இன்று திங்கட்கிழமை (19) தெரிவித்தனர்.

வவுனியா, கோவில்புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 4 மாணவர்கள் மயிலங்குளம் குளத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (18) மாலை குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது குறித்த மாணவர்கள் குளத்தில் குளித்துக் கொண்டிருந்த போது ஒரு மாணவன் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் வவுனியா, கோவில் புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவராவார்.

சம்பவம் தொடர்பில் மாமடுப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.