இரத்தினபுரியில் பலாங்கொடை, மஸ்ஸென்ன பிரதேசத்தில் இளைய மகனால் கொடூரமாக தாக்கப்பட்டு தாய் காயமடைந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த தாய் சிகிச்சைக்காக பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
52 வயதுடைய தாயொருவரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோபமடைந்த மூத்த மகன் சந்தேக நபரான இளைய மகனை தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான டீமலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













