திசைகாட்டி அரசாங்கத்தால் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள மின்சார கொள்கை நுகர்வோருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கும் தண்டனையாக அமையும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிடுவதாவது,
அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள மின்சார கொள்கையால் குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
தெரு விளக்குகளுக்கு நுகர்வோரிடமிருந்து கட்டணம் வசூலிக்கும் முன்மொழிவுகள் மற்றும் ஒரு யூனிட்டிற்கு ரூபா 67 கட்டணம் விதிக்கும் நேர உபயோக முறையை அமுல்படுத்தும் முயற்சிகள் தெளிவாக அநீதியானவை. மக்கள் தெரு விளக்குகளுக்கான கட்டணங்களை செலுத்த மறுத்தால் அதன் மூலம் சட்டம் மற்றும் ஒழுங்கை நிறைவேற்றுவதில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
பகல் நேரத்தில் நுகர்வோரால் பயன்படுத்தப்படும் யூனிட்டுகளின் அடிப்படையில் சூரிய மின் உற்பத்திக்கு கட்டணம் செலுத்துதல் போன்ற முன்மொழிவுகள் பொதுமக்களிடம் கருத்துக்கள் கேட்டறியப்படல் வேண்டும்.
அரசாங்கம் மின்சார கட்டணங்களை 33% குறைக்கும் என்று அளித்த வாக்குறுதியை அப்படியே நடைமுறைப்படுத்த வேண்டும், 11.57% கட்டணங்களை உயர்த்துதல் கூடாது மற்றும் தேவையான அதிகபட்ச அளவிற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு ஆதரவு வழங்கப்பட வேண்டும். பொய், அசத்தியம் மற்றும் ஏமாற்றத்தை நிறுத்துவதற்கான காலம் இதுவாகும் என குறிப்பட்டுள்ளார்.


.webp)

.jpg)






.jpg)

