மதுபானம் அருந்திவிட்டு உறங்கியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு



ஹோமாகம புத்தக களஞ்சியசாலையின் விடுதியில் தங்கியிருந்த பணியாளர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (18) இரவு இடம்பெற்றுள்ளது.

பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடையவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் சம்பவத்தன்று இரவு தனது சக பணியாளர்களுடன் இணைந்து விடுதியில் மதுபானம் அருந்திவிட்டு உறங்கியுள்ள நிலையில், மறுநாள் காலை எழுந்திருக்காததால் சக பணியாளர்களின் உதவியுடன் அம்பியூலன்ஸ் ஊடாக ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

எவ்வாறிருப்பினும் இவர் ஏற்கனமே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹோமாகம தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.