மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட களுவாஞ்சிகுடி மீன் சந்தையில் செவவாய்கிழமை (20) மனித நுகர்வுக்கு ஒவ்வாத நிலையில் பழுதடைந்த நிலையில் விற்பனை செய்யப்பட்ட 16 கிலோ கீரி மீன்கள் கைப்பற்றப்பட்டு பொதுச் சுகாதார பரிசோதகர்களால் உடனே அழிக்கப்பட்டன.
களுவாஞ்சிகுடி பகுதி பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் மூலம் இவை கண்டுபிடிக்கப்பட்டன.
இதன் போது வியாபாரிக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அறிவுறுத்தல்களும் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.












.jpeg)
