நடுவீதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயம் - இளைஞர்கள் கைது


மாத்தளை நகரத்தில் சங்கமித்த பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் குழு ஒன்று மாத்தளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளது.

மாத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இளைஞர்கள் குழு கைது செய்யப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து 10 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

18 முதல் 23 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.