மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை: நால்வர் கைது !


சீதுவை - நீர்கொழும்பு வீதியில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதுடன், நான்கு சந்தேக நபர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

சீதுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாத்தளை, அலவ்வ மற்றும் ஹட்டன் பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், 21 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்