உயிரிழந்தவர் அக்மீமன, கொனமுல்ல பிரதேசத்தில் 22 வயதுடைய கைதி ஆவார்.
கைதி போதைப்பொருள் குற்றச்சாட்டு தொடர்பில் அக்மீமன பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் காலி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 15 ஆம் திகதி சிறைச்சாலையில் உள்ள கிணற்றில் குளித்துக்கொண்டிருந்த போது திடீரென கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த அதிகாரிகள் சிலர் இணைந்து கிணற்றில் விழுந்த கைதியை காப்பாற்றி சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் காலி கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றியதையடுத்து அவர் ஞாயிற்றுக்கிழமை (18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் காலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


.jpg)








.jpeg)

