.jpeg)
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் இரண்டு ரவைகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இன்று (30) வத்தளை நீதவான் பிறப்பித்த உத்தரவுக்கமைய அவர் இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கிடைத்த தகவலுக்கமைய, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று பமுணுகம பகுதியில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.









.jpeg)


