12 வயதுடைய மகளே இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹிங்குரக்கொட, தெபரெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கடந்த 5 ஆம் திகதி கணவன் மற்றும் மனைவிக்கு இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.
தகராறின் போது கணவன் தனது மனைவியை கத்தியால் குத்த முயன்றுள்ளார்.
இதனை தடுக்க முயன்ற 12 வயதுடைய மகள் கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த மகள் பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிங்குரக்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.









.jpg)



.jpeg)