வெளிநாட்டு கஞ்சாவுடன் ஒருவர் கைது !


யாழ்ப்பாணம் மரதன்கேணி பகுதியில் வெள்ளிக்கிழமை (9) இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படை இணைந்து நடத்திய சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது, சுமார் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரை ஒருவரை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, யாழ்ப்பாணத்தின் மரதன்கேணி பகுதியில் வடக்கு கடற்படை கட்டளை, பருத்தித்துறை கடற்படை பிரிவு மற்றும் நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் நடத்தப்பட்ட இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான நபர் விசாரிக்கப்பட்டார்.

குறித்த நேரத்தில், சந்தேக நபர் வெளிநாட்டு கஞ்சாவுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் சம்பியன்பத்து பகுதியைச் சேர்ந்த 19 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேக நபரும் வெளிநாட்டு கஞ்சா கையிருப்பும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெல்லியடி பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டன.