அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் மீனவர் சங்க உறுப்பினர்களின் பிள்ளைகளிற்கு வவுச்சர்கள் வழங்கி வைப்பு


அவுஸ்ரேலிய காரைதீவு மக்கள் ஒன்றியத்தால் ( AUSKAR ) மட்டுப்பட்ட காரைதீவு மீனவர் சங்க உறுப்பினர்களின் பாடசாலைக்கு செல்லும் 18 பிள்ளைகளிற்கு கற்றல் உபகரணங்கள் கொள்வனவு செய்வதற்கான 4000.00 பெறுமதியான வவுச்சர்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வு சங்கத்தின் செயலாளர் ர.சுஜீதன் தலைமையில் காரைதீவு வீரபத்திரர் அறநெறி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.