இலங்கையில் தந்தங்களைக் கொண்ட இளம் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு !


2021 முதல் 2024ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள், தந்தங்களைக் கொண்ட இளம் யானைகளின் எண்ணிக்கை 9.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி சுட்க்காட்டியுள்ளார்.

2021ஆம் ஆண்டில் தந்தங்களைக் கொண்ட இளம் யானைகள் 8.4 சதவீதமாக இருந்தாகவும், அது 2024ஆம் ஆண்டில் 17.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

1993ஆம் ஆண்டில், தந்தங்களைக் கொண்ட இளம் யானைகளின் எண்ணிக்கை 11 சதவீதமாக இருந்தது. தற்போது இது 6.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டில் 5,879ஆக இருந்த யானைகளின் எண்ணிக்கை 2024 இல் 7,451ஆக அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக படபெந்தி தெரிவித்துள்ளார்.