புத்துயிர் பெறும் பாதை கிராமப்புற பாதைமேம்பாட்டுத் திட்டத்தில் மட்டக்களப்பு வெல்லாவெளி வீதிஅமைப்பு பணிகள் ஆரம்பித்து வைப்பு !


(சிஹாரா லத்தீப்)


புத்துயிர்பெறும் பாதை என்னும் தொனிப்பொருளில் 2026ஆம் ஆண்டு கிராமிய வீதிகளை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் தேசிய வேலைத்திட்டம் அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

.புத்துயிர் பெறும் பாதை" எனும் தொனிப்பொருளில் கிராமப்புற பாதைமேம்பாட்டுத் திட்டத் திற்கு முதற்கட்டமாக 5000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு நாடளாவிய ரீதியில் 76 வீதிகள் புனரமைப்பு பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் மட்டக்களப்புமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு மற்றும் பிரஜா சக்தி குழுவின் ஆலோசைக்கமைய நிருமாணிக்கப்படவிருக்கும் மட்டக்களப்பு போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சங்கர் புறம் விளாவடி வீதி ஆரம்ப நிகழ்வுஅண்மையில் நடைபெற்றது

810 மீட்டர் நீளமான இவ் வீதியானது கொங்கிரீட் வீதியாக 2 8 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபுபிரதம அதிதியாகக் கலந்துகொண்டு வீதிபிவிருத்திப்பணிகளை வைபவரீதியாக ஆரம் பித்துவைத்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் வனிதா செல்லப்பெருமாள் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் ஏ.எம்.சீ.ரீ.கே.அத்தநாயக்க, திட்டவதிவிட பொறியலாளர்.ரீ.அமிர்தலிங்கம் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் ஏ.ரங்கராஜன் வெல்லாவெளி,பிரதேச சபை உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சங்கரபுரம் பகுதியில் பெருமளவான மக்கள் பயன்படுத்தும் இந்த வீதியானது.மழை காலங்களில் மக்கள் பயனிக்கமுடியாத நிலையில்இருந்து வந்துள்ளது . இந்த வீதியை அமைக்க அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.