
முன்பள்ளிகளின் மேம்பாட்டைக் கவனத்திற் கொண்டு அதன் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு கடந்த ஜூலை மாதம் முதல் 6000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடளாவிய ரீதியிலுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது என சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சர் சரோஜா போல் ராஜ் தெரிவித்தார்.
கடந்த நவம்பர் மாதம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் எழுப்பிய 27 இன் கீழ் 2இன் கேள்விகளுக்கு நேற்று வியாழக்கிழமை சபையில் பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டு தகைமை பெற்ற முன்பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 15,669 ஆகும். 2025 ஆம் ஆண்டில் தகைமை பெற்றுள்ள ஆரம்ப பாடசாலை ஆசிரியர்களில் எண்ணிக்கை 15,,832 ஆகும். அதற்காக பின்பற்றப்பட்டுள்ள முறைமையானது 2022 -06 -3ஆம் திகதி அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ள மகளிர் மற்றும் சிறுவர்கள் தொடர்பான சுற்றறிக்கை 2021, 2022 இன்படி தகைமை பெற்றுள்ள முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கே மேற்படி கொடுப்பனவு வழங்கப்படுகிறது.
தகைமை பெற்றுள்ள மேற்படி கொடுப்பனவுக்கு உட்பட்டுள்ள எந்த முன்பள்ளி ஆசிரியர்களும் பதவி நீக்கம் செய்யப்படவில்லை. முன்பள்ளி பாடத்திட்டம் ஒன்றை நாம் உருவாக்கியுள்ளோம்.
அதற்கு மேலதிகமாக குறித்த விடயத்துக்கான பயிற்சிகள் வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.மேற்படி அனைத்து ஆசிரியர்களையும் ஆசிரியர்களாக பதிவு செய்வதற்கு பயிற்சி டிப்ளோமோ பாடநெறி நடத்தப்பட்டுள்ளது.
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின்படி முன்பள்ளிகள் மாகாண சபைகளுக்கு உட்பட்ட பாடசாலைகளாக மாகாண சபையின் முன்பள்ளிகள் அதிகார சபையின் கீழ் அவை கண்காணிக்கப்படுகின்றன. 9 மாகாணங்களில் வெவ்வேறு விதமாக செயப்படுகின்ற நிலையில் அந்த முன்பள்ளிகளை தேசிய கொள்கையின் கீழ் ஒரே முன்பள்ளி நியதியின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை ஓய்வூதியம் இல்லாத நிலையில் மீனவர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதியம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதைப் போன்று முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது என்றார்.








.jpg)



.jpeg)