தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனுக்கு விளக்கமறியல் !


காலியில் அஹங்கம - தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15) தாயை கத்தியால் குத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மகனை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் சமீர தொடன்கொட உத்தரவிட்டுள்ளார்.

அஹங்கம - தித்தகல்ல பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய மகனே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

அஹங்கம - தித்தகல்ல பகுதியில் கடந்த வியாழக்கிழமை (15) சந்தேக நபரான மகன் மதுபோதையில் தனது மனைவியை கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ள நிலையில் பின்னர் தனது தாயை கத்தியால் குத்தி கொலைசெய்துள்ளார்.

காயமடைந்த மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொலைசெய்யப்பட்டவர் அஹங்கம - தித்தகல்ல பகுதியை சேர்ந்த 80 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தாய் ஆவார்.

இதனையடுத்து சந்தேக நபரான மகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.