
இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு, எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2.5 சதவீத வரி அறவிடப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
இது, 2026 பட்ஜெட்டில் அங்கீகரிக்கப்பட்ட வரி எனவும், தற்போது அனுமதி பெறும் வாகனங்களுக்கு பொருத்தமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுங்கத் திணைக்களத்தினால், அதனுடன் தொடர்புடைய வரி வசூலிக்கப்படும்.
இன்று வெள்ளிக்கிழமை (13) கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
வாகனத்தின் பெறுமதி அதிகமாக இருப்பதால் 2.5 சதவீதம் என்பது ஓரளவு கவனிக்கத்தக்க வரியாகும். எளிமையாகச் சொன்னால், 1 மில்லியன் ரூபாய் பெறுமதியுள்ள வாகனத்தின் விலை சுமார் 2.5 மில்லியன் ரூபாயாக அதிகரிக்கிறது.
எனவே, வரி வசூலிக்கப்பட்டுள்ளதால், வாகன விலைகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
இருப்பினும், 'டித்வா' அனர்த்தத்திற்கு பின்னர், தற்போது வாகனங்கள் ஆர்வத்துடன் வாங்கப்படுவதாகவும்; வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் அரோஷ ரொட்ரிகோ சுட்டிக்காட்டியுள்ளார்.





.jpeg)






.jpeg)