
மத்திய கிழக்கு பிராந்தியத்தின் சில பகுதிகளில் வான்வழி மூடப்பட்டுள்ள நிலையில், அங்கு நிலவும் பதற்றமான சூழ்நிலையை காரணமாகக் கொண்டு, இன்று இயக்கப்படவிருந்த 10 விமான சேவைகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ரத்து செய்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரத்து செய்யப்பட்ட விமான சேவைகள் பின்வருமாறு -
UL265 – கொழும்பு முதல் ரியாத்
UL229 – கொழும்பு முதல் குவைத்
UL253 – கொழும்பு முதல் டம்மாம்
UL225 – கொழும்பு முதல் துபாய்
UL217 – கொழும்பு முதல் தோஹா
UL230 – குவைத் முதல் கொழும்பு
UL266 – ரியாத் முதல் கொழும்பு
UL254 – டம்மாம் முதல் கொழும்பு
UL226 – துபாய் முதல் கொழும்பு
UL218 – தோஹா முதல் கொழும்பு
மேலும் தகவல்களுக்கு அல்லது பயண விவரங்களை உறுதிப்படுத்திக் கொள்ள, பயணிகள் 1979 (இலங்கைக்குள்), +94 11 777 1979 (சர்வதேச), அல்லது WhatsApp +94 74 444 1979 (அரட்டை சேவை மட்டும்) ஆகிய எண்களை தொடர்புகொள்ளலாம்.
அல்லது தங்களது பயண முகவரை அணுகவும், அல்லது www.srilankan.com இணையதளத்தை பார்வையிடவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












