டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ள 2025 ஆம் ஆண்டுக்கான ஊழல் உணர்வு குறியீட்டு அறிக்கையில், இலங்கை 14 இடங்கள் முன்னோக்கி நகர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின் படி, 2024 ஆம் ஆண்டில் 121 ஆவது இடத்தில் இருந்த இலங்கை, 2025 ஆம் ஆண்டில் 107 ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கை பெற்றுள்ள புள்ளிகளில் 3 புள்ளிகள் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
உலகின் 181 நாடுகள் மற்றும் ஆட்சி பிரதேசங்கள் அடங்கிய இந்த தர வரிசையில், 0 முதல் 100 வரை மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. 0 என்பது மிகவும் ஊழலான நிலையை குறிக்கின்றது. 100 என்பது மிகவும் தூய்மையான பொதுத் துறையை குறிக்கின்றது.
தொடர்ச்சியாக எட்டாவது ஆண்டாகவும் டென்மார்க் 89 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. பின்லாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளும் முன்னணி நாடுகளாகத் திகழ்கின்றன. தொடர்ந்தும், தென் சூடான் 9, சோமாலியா 9 மற்றும் வெனிசுலா 10 ஆகியவை குறைந்த புள்ளிகளுடன் குறியீட்டு பட்டியலில் கடைசி இடங்களில் உள்ளன.
உலகளாவிய ரீதியில் ஊழல் நிலை மேலும் மோசமடைந்து வருவதாகவும், நிலையான ஜனநாயக நாடுகளிலும் கூட தலைமைத்துவத் தளர்வுகள் காரணமாக ஊழல் அதிகரித்து வருவதாகவும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த குறியீடு உலக வங்கி, உலக பொருளாதார மன்றம் உள்ளிட்ட 13 சுயாதீன வெளிப்புற ஆதாரங்களின் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது












.jpeg)
