அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட படகு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுடன் மரைக்காயர் பட்டினத்தைச் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸார் பறிமுதல் செய்த முந்திரிப் பருப்பு மூடைகளின் பெறுமதி இந்திய மதிப்பில் 15 லட்சம் ரூபாய் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்ட கடற்கரை இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம், வேதாளை, மரைக்காயர் பட்டினம், குந்துகால், களிமண்குண்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக நாட்டுப்படகில் கஞ்சா பீடி இலை பண்டல்கள், முந்திரி பருப்பு, கடல் அட்டை, சமையல் மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பைபர் படகில் பொருட்கள் கடத்தப்படவிருப்பதாக கியூ பிரிவு ஆய்வாளர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை கியூ பிரிவு பொலிஸார் குறித்த கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோதே இந்த மூடைகள் சிக்கியுள்ளன.
பொலிஸார் கைது நடவடிக்கையில் ஈடுபட்டபோது இருவரை மடக்கிப் பிடிக்க முயன்றதாகவும் அவர்கள் இருவரும் கடலில் குதித்து தப்பிய நிலையிலேயே, மற்றுமொரு நபரான மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த நபரை கைதுசெய்து, அவரிடமிருந்த பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பறிமுதல் செய்யப்பட்ட 620 கிலோ எடை கொண்ட உயர் ரக முந்திரி பருப்புகளும் 20க்கும் மேற்பட்ட சாக்கு முடைகளில் பொதி செய்யப்பட்டிருந்தன.
இதையடுத்து கைப்பற்றப்பட்ட முந்திரி பருப்பு அடங்கிய சாக்கு மூடைகள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், படகு உள்ளிட்டவற்றை மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் கியூ பிரிவு பொலிஸார் ஒப்படைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதுடன் கடலில் குதித்துத் தப்பிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.













