திருக்கோவில் சீரடி சாய் கருணாலயத்தில் இடம்பெறவுள்ள மாபெரும் வேள்வியாகம் !!!


திருக்கோவில் சீரடி சாய் கருணாலயத்தில் வருகின்ற 3/3/2026 செவ்வாய்கிழமை பௌர்னமி தினத்தில் உலகநன்மை வேண்டியும் 210 சித்தர்களின் ஆசிர்வாதம் மக்களுக்கு கிடைக்கபெறுவதற்காகவும், 

இறை அருளோடு மாபெரும் வேள்வியாகம் பிரம்மரிஷி மலை அன்னைசித்தர் இராஜகுமார் சுவாமியின் சீடரும் , இலங்கை சித்தர் பீடத்தின் குரு முதல்வர் யோகி கோபிநாத் சுவாமிகளால் முற்பகல் 10 மணியளவில் சாய் கருணாலயத்தில் இடம்பெறவுள்ளது.

 ஆகவே இந்த புண்ணிய காரியத்தில் ஈழத்து அனைத்து மக்களையும் கலந்துகொண்டு சித்தர்களின் அருள் ஆசியினை பெறுமாறு இறைஆசியோடு அழைக்கின்றோம்.


- திருக்கோவில் சீரடி சாய் கருணாலயம் -