ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


வத்தளை - குடாயேதண்ட பகுதியில், ஐஸ் போதைப்பொருளுடன், சந்தேகநபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

வத்தளை பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனைக்கமைய, இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து, 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வத்தளை பகுதியை சேர்ந்த 34 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.