சாய்ந்தமருதில் சாதாரண தர பரீட்சையை முன்னிட்டு புகை விசிறல் நடவடிக்கை


(நூருல் ஹுதா உமர்)

இவ்வார முடிவில் இடம்பெறவுள்ள கல்வி பொதுத்தராதர சாதாரண தர (O/L) பரீட்சையை முன்னிட்டு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் அவர்களின் வழிகாட்டலில் இன்று (16.02.2026) சாய்ந்தமருது சுகாதார பிரிவுக்குட்பட்ட பரீட்சை நிலையங்களில் புகை விசிறல் (Fogging) நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

பரீட்சை காலப்பகுதியில் மாணவர்கள் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான சூழலில் பரீட்சையை எதிர்கொள்ளும் வகையில் டெங்கு உள்ளிட்ட நுளம்பு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுகாதார அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து பரீட்சை மையங்கள் அமைந்துள்ள பாடசாலை வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் புகை விசிறல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பரீட்சை காலத்தில் மாணவர்களின் நலன் முதன்மைப்படுத்தப்படுவதாகவும், தேவையான சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.