இந்த விமானத்திற்காக ஏர்பஸ் ஏ330 விமானம் நிறுத்தப்பட்டதுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய குறித்த விமானம் தண்ணீர் வணக்கத்துடன் வரவேற்கப்பட்டது.
கெபிடல் ஏர் லைன்ஸ் விமானம் ஜே.டி-487, 170 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன், நேற்று மதியம் 01.46 மணிக்கு சீனாவின் பெய்ஜிங்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
இனி, குறித்த விமான நிறுவனத்தின் விமானம் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளிலும் பிற்பகல் 02.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து அதே நாளில் மாலை 04.20 மணிக்கு சீனாவின் பீஜிங்கிற்குப் புறப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான சீன துணைத் தூதர் ஜு யான்வெய், கட்டுநாயக்க விமான நிலையத்தின் அபிவிருத்தி தலைவர் அருண ராஜபக்ஷ உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.













.webp)