இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் முதன்மை ஆசிரியர் பயிற்சி


(சித்தா)

இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்திய நிலையத்தில் முதன்மை ஆசிரியர்களுக்கான கற்பித்தல் மேற்பார்வைக்கான பயிற்சி இன்று (13.02.2026); இணைப்பாளர்,கல்விமாணி (சிறப்பு), ஆரம்பக் கல்வி இலங்கை திறந்த பல்கலைக்கழகம், ஸியானி தேவரூபன் தலைமையில் உதவிப் பணிப்பாளர் இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தின் மட்டக்களப்பு பிராந்தியம் ஏ.டி.கமலநாதன் வரவேற்புரையுடன் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வளவாளர்களாக இலங்கை திறந்த பல்கலைக் கழகம்,நாவல. முன்கல்வி மற்றும் ஆரம்பக் கல்வி பீடம் பேராசிரியர் தேவராசா முகுந்தன், இலங்கை திறந்த பல்கலைக் கழகம்,நாவல. சிரேஸ்ட விரிவுரையாளர் ஜே.டிலானி மற்றும் இலங்கை திறந்த பல்கலைக் கழகம்,நாவல.விரிவுரையாளர் ஆர்.தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சியில் மட்டக்களப்பு பிராந்திய நிலையம், திருகோணமலை மற்றும் அம்பாரை நிலையத்தினைச் சேர்ந்த முதன்மை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

பயிற்சியின் போது நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்வது, தொழில்முறை நடைமுறையை வலுப்படுத்துவது, ஆரம்பக் கல்வியில் சிறந்து விளங்குவதை ஊக்குவித்தல் போன்ற விடயங்களில் கவனம் செலுத்தப்பட்டது.