கற்குவாரி விபத்து: மண்ணுக்குள் புதையுண்ட இருவரின் சடலங்களும் மீட்பு !


பண்டாரவளை - லியங்கஹவெல பகுதியில் இடம்பெற்ற கற்குவாரி விபத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்கள், மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 14ஆம் திகதி லியங்கஹவெல பகுதியிலுள்ள கற்குவாரியில் கல் மற்றும் மண் சரிந்து விபத்துக்குள்ளானதில் இருவர் புதையுண்டு உயிரிழந்தனர்.

இதனை தொடர்ந்து, பதுளை அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் வேண்டுகேளிற்கிணங்க, சிவில் அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவத்தினர் இணைந்து, இருவரின் சடலங்களையும் மீட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.