கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாராளுமன்றத்தில் தற்போதுள்ள சபாநாயகரே இலங்கை வரலாற்றில் மிகவும் மோசமான சபாநாயகர் ஆவார். பாகீர் மாக்கார், கரு ஜயசூரிய போன்ற சபாநாயகர்களின் செயற்பாடுகளை நாம் பார்த்திருக்கின்றோம். அவர்கள் மிகவும் சுயாதீமான முறையில் பாராளுமன்ற செயற்பாடுகளை நிர்வகித்திருக்கின்றனர்.
தற்போதைய சபாநாயகருடன் ஒப்பிடுகையில் ராஜபக்ஷ குடும்பத்தின் சமல் ராஜபக்ஷவின் செயற்பாடுகள் இவற்றை விட சிறந்தது எனக் கூறலாம். அதேவேளை மஹிந்த யாபா அபேவர்தன முற்று முழுதாக பக்க சார்பாகவே செயற்பட்டார். தற்போதைய சபாநாயகர் அவரை விடவும் மோசமானவர்.
அவரது செயற்பாடுகள் தொடர்பில் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அவர் சபாநாயகர் பதவியிலிருந்து விலக வேண்டும். அரசியலமைப்பின் 41 - அ உறுப்புரைக்கமைய அரசியலமைப்பு பேரவையின் தலைவர் சபாநாயகர் ஆவார். இதன் ஊடாகவே இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவு செய்யப்படுகின்றார். அவ்வாறிருக்கையில் இவர் தொடர்ந்தும் பதவியில் நீடித்தால் எவ்வாறு சட்டம் பக்கசார்பின்றி நடைமுறைப்படுத்தப்படும் என்று நம்புவது?
ஜனாதிபதிக்கும் 159 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் சட்டம் அனைவருக்கும் சமமானது எனக் கூறி பெருமை பேசிக் கொண்டிருக்க முடியாது. தேசிய மக்கள் சக்தியில் அனைவரும் தூய்மையானவர்கள் எனக் கூறினர். ஆனால் அனைவரும் அவ்வாறானவர்கள் அல்ல.
தற்போது அரசாங்கத்திலுள்ள பெரும்பாலானவர்கள் மீது ஊழல், மோசடி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. பலர் சட்டத்தை மீறி செயற்படுகின்றனர். பொய் கூறுவதற்கு ஒலிம்பிக் போட்டி நடத்தினால் ஜனாதிபதி அதில் தங்கப் பதக்கத்தை வெல்வார். ஏனையோர் வெள்ளி மற்றும் வெண்கலப்பதங்களை வெல்வர்.
இவற்றுக்கு மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட வேண்டும். மக்கள் வரிப்பணம் தான் இவர்களால் இவ்வாறு சட்ட விரோதமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொய் கூறும் போட்டில் மாத்திரமல்ல, நடிப்பு போட்டியிலும் தென்னிந்திய நடிகர்களை எமது ஜனாதிபதி வென்றுவிட்டார்.
லயன் அறைகளுக்குச் சென்று உணவு உண்பதற்கு மாத்திரம் ஜனாதிபதி மறந்துவிட்டார். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள கொலை வழக்கில் மரண தண்டனை வழங்கப்பட்டமை மகிழ்ச்சிக்குரியது. அதேபோன்று 2022 அரசியல் கலவரங்களின் போது பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தவர்கள், பாராளுமன்றத்தை சுற்றி வளைக்க முயற்சித்தவர்களுக்கு எதிராகவும் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றார்.












.jpeg)
