நாட்டில் பெரும்பான்மையான மக்கள் பௌத்த மதத்தவர்கள் என்பதால், புத்த மத கலாசாரம் மற்றும் தத்துவத்தை பாதுகாப்பது நாட்டிலுள்ள அனைத்து மதங்களுக்கும் நன்மை பயக்குமென பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (11) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்; இந்த நாடு பௌத்த மத அடித்தளத்தில் உருவானதென நான், நம்புகிறேன்.பௌத்த மதத்தை இந்நாடு அடிப்படையாகக் கொண்டுள்ளதால்,இங்குள்ள அனைத்து மதங்களையும் பாதுகாக்க முடியும். நான் ஒரு சிங்கள பௌத்தன், அதே சமயம் பிற கலாசாரங்களையும் பாதுகாக்கும் பணியிலும் நான், ஈடுபட்டுள்ளேன்.எனது மதத்தில் நம்பிக்கை வைத்திருப்பதாலேயே, பௌத்த கலாசாரத்தை பாதுகாக்க முடிந்தது. மதத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள்,வேற்று மொழி, மதம் அல்லது கலாசாரத்தை பாதுகாக்க முடியாது.
இவ்வாறு நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.












.jpeg)
