தொடரும் ஈரானின் ஏவுகணை மழை: இஸ்ரேலில் 1,929 பேர் காயம் !


போர் தொடங்கி ஒரு வாரத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 1,929 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

காயமடைந்தவர்களில் 122 பேர் இன்னும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அவர்களில் ஒன்பது பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும், இவர்களில் சிலர் ஏவுகணைத் தாக்குதல்களால் நேரடியாகப் பாதிக்கப்படாமல், வேறு காரணங்களால் காயமடைந்தவர்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்திற்குள் மட்டும் 157 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை இன்று காலை உள்ளூர் நேரப்படி 07:00 மணிக்கு வெளியிடப்பட்டது.

இதற்கிடையில், ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதல்கள் தொடர்வதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது டெலிகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

குறித்த அச்சுறுத்தல்களை இடைமறித்து அழிப்பதற்காகப் பாதுகாப்பு அமைப்புகள் செயற்பட்டு வருகின்றன என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.