2600 போதை மாத்திரைகளுடன் இரு பெண்கள் கைது !


வெலிகடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நுகேகொடை பிராந்திய குற்றப்புலனாய்வு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, அடையாளம் காணப்படாத 2,600 போதை மாத்திரைகளுடன் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று வெள்ளிக்கிழமை (27) மதியம் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது ஒரு சந்தேக நபரிடமிருந்து 2,000 போதை மாத்திரைகளும், மற்றைய சந்தேக நபரிடமிருந்து 600 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் ஒபயசேகரபுர மற்றும் ஒருகொடவத்தை பகுதிகளைச் சேர்ந்த 40 மற்றும் 56 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் வெலிகடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் வெலிகடை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.