ஹற்றன் – போடைஸ் பிரதான வீதியின் போடைஸ் என்சி பிரிவில் இன்று (12) முற்பகல் 11 மணியளவில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது.
வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 70 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி பயணித்த இந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதுடன், இவர்கள் டிக்கோயா பகுதியிலிருந்து டயகம நோக்கி தோட்டப் பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த மூவரும் பிரதேசவாசிகளின் உதவியுடன் உடனடியாக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தினால்முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கரவண்டியை மீட்க முயன்ற போது மற்றுமொரு ஆபத்தான சம்பவம் பதிவாகியுள்ளது.
பள்ளத்தில் தங்கியிருந்த முச்சக்கரவண்டி மீண்டும் கீழ் நோக்கி உருண்டு சென்றது.
இதன்போது, அதன் அருகே நின்ற நபர் ஒருவர் முச்சக்கரவண்டிகுள் சிக்காமல் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.
அதிவேகம் காரணமாக வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்துக்குக் காரணம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் ஹற்றன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.











.jpg)

.jpeg)