குருநாகல் - பொல்பித்திகம, கிரிபமுனேகம-யாய பகுதியில், விவசாயக் கிணற்றில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் செம்புகுலிய, கெக்கிராவ பகுதியைச் சேர்ந்த 10 வயதுடைய சிறுவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் விளையாடிக்கொண்டிருந்த போது, வீட்டின் பின்புறம் பாதுகாப்பற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த விவசாயக் கிணற்றில் தவறி விழுந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்பித்திகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













