ஐக்கிய அரபு ஃபுஜைரா எண்ணெய் தொழிற்பகுதியில் ட்ரோன் தடுப்பு நடவடிக்கைக்கு பின் தீ விபத்து



ஐக்கிய அரபு  ஃபுஜைராவில் உள்ள Fujairah Oil Industry Zone (FOIZ) பகுதியில் செவ்வாய்க்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்த ட்ரோனின் சிதைவுகள் கீழே விழுந்ததன் காரணமாக இந்த தீ ஏற்பட்டதாக ஃபுஜைரா மீடியா அலுவலகம் அறிவித்துள்ளது.

சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், தீ உடனடியாக கட்டுப்படுத்தப்பட்டதுடன், அப்பகுதியில் இயல்பு நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.