கொக்கட்டிச்சோலை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டி

 


மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை ராமகிருஷ்ண மிஷன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது, இன்று (2026.03.26) வித்தியாலய அதிபர் சு. ரவிசங்கர் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

இந்நிகழ்வின் போது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதுடன், மாணவர்களின் அணிநடை மரியாதை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சிகள் என்பன இடம்பெற்றன. மேலும் மாணவர்களுக்கான குறுந்தூர மற்றும் அஞ்சலோட்டம், போன்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. 

பழைய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகளும் இதன்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது விபுலானந்தர் இல்லம் முதலிடத்தினையும், இராமகிருஷ்ண இல்லம் இரண்டாம் இடத்தினையும் விவேகானந்தர் இல்லம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டது.


இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி க.சுபாகரன், திருமதி.தே.உதயகரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன், ஆசிரியர் ஆலோசகர்களான ம. அரியதாஸ், மாணிக்கவாசகம், கோட்டப் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.