கடந்த புதன்கிழமை (11) நோட்டன் பகுதியில் உள்ள ஒஸ்போன் தோட்ட 50 ஏக்கர் பிரிவில் உள்ள வனப் பகுதியில் காட்டு மரை ஒன்றை வேட்டையாடிய இருவருக்கு எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியல் ஹட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹட்டன் வனவிலங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து ஹட்டன் வன துரை அதிகாரிகள் நல்லதண்ணி வன ஜீவராசிகள் அதிகாரி மற்றும் நோட்டன் பொலிஸார் இனைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேட்டையாடிய மரை இறைச்சியுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 52 வயது 37 வயது மதிக்கத்தக்க நோட்டன் ஒஸ்போன் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இவர்களிடமிருந்து வேட்டையாடிய மரை இறைச்சியும் கைப்பற்றப்பட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு சந்தேக நபர்களையும் ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பட்ட போது சந்தேக நபர்கள் இருவரும் எதிர்வரும் புதன்கிழமை (18) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் வேட்டையாடிய மரை இறைச்சியை பாவனைக்கு உதவாத வகையில் மண்ணெண்ணெய் ஊற்றி புதைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.











.jpeg)
.webp)
