பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளில் மாற்றம்? இன்று உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகிறது !


எரிபொருள் மற்றும் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திகளின் விலைகளை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று திங்கட்கிழமை (23) எடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்றையதினம் காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இக்கலந்துரையாடலைத் தொடர்ந்து, விலை அதிகரிப்பு தொடர்பான உத்தியோகபூர்வ தீர்மானம் அறிவிக்கப்படும் என அந்தச் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

முக்கியமாக எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரித் தொழில் தற்போது பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.