சட்டவிரோத மின்சாரக் கம்பியில் சிக்கி ஒருவர் பலி !



ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரணை கந்தன அமுனு எலபீல்ல பகுதியில் வயல் நிலமொன்றில் சட்டவிரோதமாகப் பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கி நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் ஹொரணை, கந்தன பகுதியைச் சேர்ந்த 68 வயதுடைய முதியவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அத்துமீறி நுழைவதைத் தடுப்பதற்காகவோ அல்லது விலங்குகளை வேட்டையாடுவதற்காகவோ சட்டவிரோதமாக பொருத்தப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு உயிரிழந்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.