எரிபொருள் கியூ.ஆர் குறியீட்டை பெறுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்க்க புதிய நடவடிக்கை !


எரிபொருளுக்கான கியூ.ஆர் குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் ஒன்பது WhatsApp இலக்கங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது.

சுமார் 600,000 பிழையான கியூ.ஆர் குறியீடுகள் முன்னதாக சரிசெய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமார குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தமக்கு கியூ.ஆர் குறியீடு இல்லை எனக் கூறி எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நபர்களைக் கண்டறிவதற்காக விசேட திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.