கியூ.ஆர் குறியீடு முறைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள எரிபொருள் வரிசைகள் காரணமாக, பாடசாலை நடவடிக்கைகளை நிறுத்திவைக்கவோ அல்லது தொலைதூரக் கல்வி முறைகளை அறிமுகப்படுத்தவோ எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், பாடசாலைகள் தங்களது வழக்கமான செயல்பாடுகளைத் தொடரும் என்றும் கல்வி அமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், நாட்டின் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சவால்கள் குறித்து விவாதிப்பதற்காக நடைபெற்ற உயர்மட்டக் கலந்துரையாடலில், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ உள்ளிட்ட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் மோதல்கள், எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய அத்தியாவசியத் துறைகளில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகளைக் கருத்திற்கொண்டு, முக்கிய பொதுச் சேவைகளைத் தடையின்றி நடத்துவதை உறுதி செய்வது குறித்து இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.


.jpg)








.jpeg)
.webp)
