மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட அரசடித்தீவு விக்னேஷ்வரா மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியானது, இன்று (2026.03.28) சனிக்கிழமை வித்தியாலய அதிபர் மு. குணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் போது ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டதுடன், மாணவர்களின் அணிநடை மரியாதை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சிகள் என்பன இடம்பெற்றன. மேலும் , மாணவர், ஆசிரியர்களுக்கு இடையிலான அஞ்சல் ஓட்டப் போட்டிகளும் நடைபெற்றன.
போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். மேலும் அணிநடை மரியாதை, குழு மற்றும் தனிப் போட்டிகளில் வெற்றி பெற்றமையை பாராட்டி இல்லங்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்களான திருமதி க.சுபாகாரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன், கோட்டப் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




















.webp)








