போரின் முதல் நாளில் அமெரிக்கா அந்தப் பள்ளியை குண்டுவீசி 175 பேர் உயிரிழந்ததாக எழுந்த கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், “நாங்கள் பார்த்த தகவல்களின் அடிப்படையில் அது ஈரானால் செய்யப்பட்டதாக நாங்கள் நினைக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் கூறுகையில், “இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுமக்களை இலக்காகக் கொள்வது ஈரானே” என தெரிவித்தார்.
இந்த தாக்குதலில் குறைந்தது 160 பேர் உயிரிழந்ததாகவும், அவர்களில் பலர் பள்ளி மாணவிகள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தாக்குதல் போர்க்குற்றமாக இருக்கக்கூடும் என்பதால் விசாரணை நடத்த வேண்டும் என்று மனித உரிமைகள் அமைப்பான Human Rights Watch கோரிக்கை விடுத்துள்ளது.













