உயர்தரப் பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்க முடியும்


2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளிடமிருந்து இன்று செவ்வாய்க்கிழமை (24) முதல் இணையவழியில் விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

பரீட்சார்த்திகள் அனைவரும் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டும்.

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலை மாணவர்கள் தமது அதிபர்கள் ஊடாக விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

தனிப்பட்ட ரீதியில் பரீட்சைக்குத் தோற்றுவோர் தமது தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தைப் பயன்படுத்தி இணையத்தளத்தில் உள்நுழைந்து சுயமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் இன்றையதினம் முதல் ஏப்ரல் 24, 2026 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

எக்காரணம் கொண்டும் விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட மாட்டாது என ஆணையாளர் நாயகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்தைச் சமர்ப்பித்த பின்னர், அதன் அச்சிடப்பட்ட பிரதி ஒன்றை எதிர்காலத் தேவைகளுக்காகப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின், பின்வரும் தொலைபேசி எண்கள் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்:

அவசர தொலைபேசி இலக்கம் : 1911
தொலைபேசி: 0112785922, 0112784537, 0112786616, 0112784208
மின்னஞ்சல்: gcealexam@gmail.com