பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை !


நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தெற்கு, ஊவா, வடமேல் மாகாணங்களுக்கும் மன்னார் மாவட்டத்திற்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அவதானம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.