நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் எதிர்காலத்தில் மின் துண்டிப்பு ஏற்படும் நிலை உருவாகலாமென வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று எரிபொருள் விநியோக கட்டமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த மின்வெட்டு தொடர்பான கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே, அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.இது பற்றி அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது;
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது யுத்த சூழ்நிலை உக்கிரமடைந்துள் ளது.இதனால் உலகளாவிய ரீதியில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. எமது நாட்டிலும் இத்தகைய நிலைமை ஏற்பட்டுள்ளது. எனினும் நெருக்கடி நிலையிலும் தடையில்லாமல் நாட்டில் எரிபொருள் விநியோகம் மேற்கொள்ளப்படுகிறது.எரிபொருள் விநியோகத்தின் உறுதிப்பாட்டை பாதுகாப்பதற்காகவே கிவ்.ஆர் முறைமை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
எரிபொருள் நெருக்கடி நிலையிலும் மின் விநியோகத்தை துண்டிக்காமல் தொடர்ச்சியாக விநியோகம் செய்யப்படுகிறது.எனினும், எதிர்வரும் காலத்தில் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்படக்கூடிய நிலைமை உள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவித்தார்










.webp)


