மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு போட்டி செவ்வாய் கிழமை வித்தியாலய அதிபர் சா. விக்னேஷ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன் போது அணிநடை மரியாதை, விளையாட்டு நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் பிரதிக்கல்வி பணிப்பாளர் திவிதரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர் ம.அரியதாஸ், பாடசாலைகளின் அதிபர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இல்ல விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சான்றிதழ்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.










.webp)
.webp)







